தமிழ்நாட்டில் வேகமாக பரவுகிறது டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரம்.

by Editor / 14-09-2023 09:42:12pm
தமிழ்நாட்டில் வேகமாக பரவுகிறது டெங்கு  தடுப்பு நடவடிக்கையை தீவிரம்.

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.இந்த நிலையில் கன்னியாகுமரி-8,சேலம்-3,கும்பகோணத்தில் 3, கடலூரில் 4, திருவண்ணாமலை-5 என பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.கீழ்கண்ட இந்த அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை பார்க்கவும் தொடர்ச்சியான காய்ச்சல் டெங்குவின் முதல் அறிகுறி ஆகும். காய்ச்சலோடு சேர்த்து தோலில் சிராய்ப்புகள், சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவையும், மோசமான தலைவலி, சோர்வு, தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி, கண்களின் பின்புறத்தில் வலி, குமட்டல், வாந்தி மற்றும் ஈறுகள் அல்லது மூக்கில் ரத்த கசிவு போன்றவை டெங்கு காய்ச்சலுக்கான பிற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் வேகமாக பரவுகிறது டெங்கு .. எச்சரிக்கை

Share via