அதிமுக - பாஜக கூட்டணியில் மோதல்

by Staff / 17-09-2023 04:42:30pm
அதிமுக - பாஜக கூட்டணியில் மோதல்

அண்ணா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக தலைவர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இன்று கோவையில் பேசிய அண்ணாமலை, சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு முன்பு ஒரு விதமாகவும், பின்பு வேறு விதமாகவும் பேசுவார். 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை என்னுடையது, என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் விடமாட்டேன் நல்ல போலீஸைப் பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via