“சூரி பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி” - அம்மன் நிர்வாகிகள்

by Staff / 02-09-2024 11:32:18am
“சூரி பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி” - அம்மன் நிர்வாகிகள்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உள்ளே இயங்கி வரும் அம்மன் உணவகத்தின் நிர்வாகத்தினர் பேட்டியளித்தனர். அவர்கள் கூறுகையில், “தன்னார்வலர்களை உணவு வழங்குவதை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களை உணவு வழங்கக் கூடாது என நாங்கள் கூறியதாக செய்திகள் வெளிவருகின்றன. நடிகர் சூரியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இந்த பிரச்சனை உருவாகியுள்ளது. இதுகுறித்து தவறான செய்தி பரப்பினால் அவர்கள் மீது புகார் அளிக்க இருக்கிறோம்” என்றனர்.

 

Tags :

Share via