சேமியா கேசரி செய்முறை

by Admin / 07-07-2021 04:54:27pm
சேமியா கேசரி செய்முறை

சேமியா கேசரி

தேவை

     சேமியா - 500 கிராம்

     சர்க்கரை – 400 கிராம்

     தண்ணீர் – 4 கப்

     நெய் – 300 கிராம்

     முந்திரி பருப்பு – 10

     ஏலக்காய் – 4

     கேசரி பவுடர் – சிறிதளவு

செய்முறை

சேமியா, முந்திரிப் பருப்பை தனித்தனியாக நெய்யில் வறுக்கவும். வாணலியில் தண்ணீர் கொதித்ததும் சேமியா போட்டு கிளறி வேகவிடவும். சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து முந்திரி பருப்பு, மீதமுள்ள நெய், கேசரி பவுடர் ஆகியவற்றை போட்டு கிளறி இறக்கவும். பிறகு ஏலப்பொடி சேர்க்கவும். பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும்.

 

Tags :

Share via