பலகோடி ரூபாய் கையாடல் செய்ததாக வால்பாறை நகராட்சி திமுக நகர் மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் மீது குற்றம்சாட்டி போராட்டம்.

by Editor / 24-02-2025 12:05:02am
பலகோடி ரூபாய் கையாடல் செய்ததாக வால்பாறை நகராட்சி திமுக நகர் மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் மீது குற்றம்சாட்டி போராட்டம்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் சரிவர நடைபெறாமல் சுமார் 10 கோடி ரூபாய் அளவில் கையாடல் செய்ததாக திமுக நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, அவரது கணவர் செல்வம் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கையாடல் செய்ததாக குற்றம்சாட்டி 3 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் வீரமணி, 9 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் க.மகுடீஸ்வரன்,15 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன்,17 வது வார்டு நகர் மன்ற மணிகண்டன் ஆகியோர் பொதுமக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் படகு இல்லம், யாத்திரை நிவாஸ், நகராட்சி தங்கும் விடுதி, பூங்கா  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியே செய்யாமல் பில் போட்டு சுமார் 20 கோடி ரூபாய்க்கும் மேலாக கையாடல் செய்திருப்பதாகவும் வார்டு பகுதிகளில் வளர்ச்சி பணி செய்வதை தவிர்த்து வருவதாகவும் இவர்களின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர் மேலும் வால்பாறை நகராட்சி பகுதியில் இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க விஜிலென்ஸ் குழு மூலம் தீவிர விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

 

Tags : பலகோடி ரூபாய் கையாடல் செய்ததாக வால்பாறை நகராட்சி திமுக நகர் மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் மீது குற்றம்சாட்டி போராட்டம்.

Share via