10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு சேமிப்பு கிடங்கு மேலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை.

by Editor / 29-03-2025 09:39:12am
10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு சேமிப்பு கிடங்கு மேலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை.

கோவையை சேர்ந்த தேவராஜ் 73. இவர் 2009ல் பழநி பகுதி அரசு சேமிப்பு கிடங்கில் மேலாளராக பணிபுரிந்தபோது மன்னார்குடியை சேர்ந்த தனியார் லாரி நிறுவன உரிமையாளர் ராகுல் 1808 நெல் மூடைகளை சேமிப்பு கிடங்கில் வைத்து விட்டு சில நாட்களுக்கு பிறகு அதை எடுக்க வந்தபோது மேலாளராக இருந்த தேவராஜ் மூடைகளை எடுக்க அனுமதி வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி அவர்கள் தேவராஜூக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்

 

Tags : 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு சேமிப்பு கிடங்கு மேலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை.

Share via