அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக
2024 மக்களவை தேர்தலோடு அருணாச்சல பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 46 இடங்களில் வென்றது. தேசிய மக்கள் கட்சி 5 இடங்களில் வென்றது. தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் அருணாச்சல மக்கள் கட்சி 2 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் அந்த மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
Tags :