தனி கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை .-முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக உரிமை மீட்பு குழு தலைவருமான பன்னீர்செல்வம் இன்று பெரிய குளத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.தனி கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்றும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் தர்மயுத்தத்திற்கு காரணம் மனோஜ் பாண்டியனும் வைத்து லிங்கம் தான் என்றார்..அதிமுகவை மீட்பதற்கான சட்ட போராட்டம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் யார் பக்கம் என்பதை நிரூபிப்பதற்காகவே தான் போட்டி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமி இன்று கூட்டணி அமைத்து செயல்பட உள்ள நிலையில் தினகரன் அருமை அண்ணன் இ பி எஸ் சி உடன் பேசி.. ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றியைப் பெறலாம். நான் தயாராக இருக்கிறேன் கேட்டு சொல்லுங்கள் என்று சொல்லி பேட்டியை முடித்தார். தகவல் தொடர்பு வழியாக தான் சொல்லாத செய்திகள் எல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்/
Tags :


















