"பேக்கரி டீலிங்".. அமைச்சரின் பேச்சில் அமளி

by Editor / 21-04-2025 03:35:08pm

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வில் அமைச்சர் சிவசங்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளை கிரி படத்தில் வரும் "பேக்கரி டீலிங்" என்ற வடிவேலு வசனத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் பேசியுள்ளார். இதனால், ஆவேசமடைந்த அதிமுகவினர் அமைச்சருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

 

Tags :

Share via