சிறிய படங்களை ஒரு பெரிய நிறுவனங்கள். தயாரித்தால் பல கலைஞர்கள் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைக்கும்
தமிழ் திரைப்படத் துறையில் பெரும் முதலீட்டு படங்கள் மட்டுமே திரை அரங்குகளிலும் உலக வர்த்தகத்திலும் ஓ டி டி தளங்களிலும் தாங்கள் செலவழித்த பணத்தை திரும்ப எடுக்கின்ற நிலை இருக்கின்றது .
சின்ன முதலீட்டு படங்கள் திரையரங்குகள் கிடைக்காமலும் திரையரங்கு கிடைத்தாலும் புதிய நடிகர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள்,தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் படங்கள் வந்த வண்ணமாக இருந்தாலும் சரியான விளம்பரமும் ஊடகங்கள் ஆதரவின்மையாலும் பல படங்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் சுவடு இன்றி மறைந்து போயின.
எப்பொழுதுமே, சின்ன படங்கள் நல்ல கதை அம்சத்தோடு... நல்ல இயக்கத்தோடு வெளிவந்து திரையுலகை காப்பாற்றியதோடு புதிய தடத்தையும் பதித்திருக்கின்றன..
பல புதுமுக நடிகர்கள் ,இயக்குனர்கள் படங்கள் திரையிடப்பட்டவுடன் எடுக்கப்பட்டு பின்பு அது சக்கை போடு போட்ட கதையும் உண்டு,.ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை, இன்றைக்கு இல்லை .ஆனாலும், சின்ன படங்கள் அணிவகுத்து வந்து கொண்டு தான் இருக்கின்றன.
.ரசிகர்கள் திரையரங்கை நோக்கி போவது என்பது பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும்தான் என்றாகிவிட்டது ..
அதனால், பல சின்ன முதலீட்டு தயாரிப்பு நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. புதிய இயக்குனர்கள் ,,நடிகர்கள், ,இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவார்கள் தங்கள் திறமையை உறுதிப்படுத்த முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்..
எம்ஜிஆர், சிவாஜி ,ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், எஸ் .எஸ். ஆர் ,முத்துராமன் போன்ற ஜாம்பவான்கள் திரை உலகில் இருந்த பொழுது படங்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தன ..வெற்றியும் பெற்றன.. மேலே குறிப்பிட்ட, ஒவ்வொரு நடிகர்களும் 100 க்கு மேற்பட்ட படங்களில் நடித்து, தங்களது திறமையை வெளிப்படுத்தியதோடு, வளமான ஒரு வாழ்க்கையும் வாழ்ந்தார்கள்
.
இவர்களைத் தொடர்ந்து வந்த கமலஹாசன் ,ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா,,விக்ரம்,சிம்பு,,தனுஷ் போன்றவர்களும் இன்றைக்கு திரை உலகில் உச்சத்தில் உள்ளார்கள். ஆனால், இவர்களுக்கு பின்னாலே வந்தவர்களில் விஜய் சேதுபதி ,சிவகாா்த்திகேயன், காா்த்தியை தவிர மற்றவர்கள் கால் ஊன்ற முடியாமல் காணாமல் போய்விட்டார்கள்.
.
இப்படியாக ,தமிழ் சினிமாவின் போக்கு பல்வேறு விதமான முரண்பாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டிருந்தாலும்..... புதிய படங்களை பெரும் பொருட்செலவில் எடுப்பவர்கள் குறைந்து போனாலும்.... சினிமா மீது உள்ள அன்பின் காரணமாக பல சிறு தயாரிப்பாளர்கள் வந்து போராடி, பல படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறாா்கள். ...அவர்கள் ,அடுத்த படத்தை எடுப்பதற்கான வாய்ப்பை தமிழ் ரசிகர்கள் வழங்காமல் போவதின் காரணமாக, அவர்களின் வாழ்வும் அவர்களுடைய திறமையும் அர்த்தமற்றதாக போய்விடுகிற சூழலை காண முடிகிறது..
கனவு தொழிற்சாலை என்று சொல்லப்படுகிற திரை உலகம் பல்வேறு தொழில் சார்ந்த திறன் படைத்தவர்களை கொண்டு இருந்தாலும் திரைத்துறைக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த கலைஞர்கள் நிரந்தரம் இல்லாத வருமானத்தின் காரணமாக , தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு..... இன்று வரும்.. நாளை வரும் என்கிற கனவுகளோடு வாழ்ந்து வருகிறார்கள்
.அவர்களின் வாழ்க்கையில், ஒரு விளக்கு ஏற்ற.... ஒரு சிறிய முதலீட்டு தயாரிப்பாளர் வந்தாலும்... அவர் படுகிற இன்னல்கள்.... அவரும் அனைத்தையும் இழந்து சினிமாவே வேண்டாம் என்று போகின்ற நிலைமை காண முடிகிறது.
சினிமா சிலரை மிகப் பெரும் கோடீஸ்வரர்களாகவும் பலரை அன்றாடம் திண்டாடக்கூடிய நிலையில் வைத்திருப்பது வேதனைக்குரியது.
பல திறமைசாலிகள் வாய்ப்பு கிடைக்காமல் போராடி பார்த்த பின்பு .....தொழிலை மாற்றி போனவர்களும் உண்டு. வாழ்க்கையை தொலைத்து விட்டு வயோதிக நிலையில் ...ஊருக்கு சென்றவர்களும் உண்டு
இந்நிலையில்,. புதிய படங்கள் வெற்றி பெற்று சம்பாதித்து, பணப்புழக்கத்தில் உள்ள நடிகர்களின் படங்கள் மறு வெளியீடாக வந்து சக்கை போடு போடுவது... எதன் பொருட்டு ? என்று விளங்கவில்லை. புதிய நடிகர்களின் இயக்குனர்களின் படங்களுக்கு திரையரங்குகளில் ஒரு முறை வந்து பார்த்த பின்பு தரமில்லை என்றால் விலகிச் செல்ல வேண்டியது ரசிகர்களின் கடமை. ஆனால், ரசிகர்கள் பழைய படங்களை கொண்டாடுகின்ற பொழுது புதியவர்களையும் ஆதரிக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு. சரியான வெளிப்பாடு இல்லாத படங்களை புறக்கணிக்கலாமே தவிர,.. படத்தையே பார்க்காமல், திரையரங்கக்கே செல்லாமல் புறக்கணிப்பது, திரைக்கலையை கொஞ்சம்- கொஞ்சமாக அழிப்பதற்கு ரசிகர்களை காரணமாகி விடுகிறார்கள்.
சினிமா கலை சார்ந்தது.. ஆனால், அதை வியாபாரம் சார்ந்ததாக மாற்றி விட்டதின் காரணமாக... இன்றைக்கு பெரும் நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தி கொண்டே இருக்கிறார்கள் ..
புதியவர்கள் திரைத்துறைக்கு வந்து தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முழு பொறுப்பு ரசிகர்களின் பக்கம் தான் உள்ளது
. ஊடகங்கள் சரியான முறையில் படங்களை விமர்சனம் செய்தால், புதிய சிறிய முதலீட்டு படங்கள் வெற்றி பெறும்.
சிறிய முதலீட்டு படத் தயாரிப்பாளர்கள் youtube விளம்பரத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. அதில் வரக்கூடிய விளம்பரங்கள் ,எந்த அளவிற்கு அவர்கள் போட்ட பணத்தை எடுப்பதற்கு துணை நிற்கும் என்று சொல்வதற்கு இல்லை.
வெகுஜன மக்களை சென்றடைய கூடிய நிலையில் விளம்பரங்கள் இருந்தால் மட்டும்தான், ஒரு படம் வெற்றியை நோக்கி நகர முடியும்..
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படங்கள் எல்லாம் மறு திரையீடலுக்கு வருவது திரைத்துறைக்கு ஒர் ஆபத்து என்பதை உணர வேண்டும்.திரைத்துறை சாா்ந்த தொழில் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதாகும்.புதிய படமென்றால் பல குடும்பங்கள் வாழும்.பழைய படம் மறு வெளியீடுயெனில் பணம் ஒட்டு மொத்தமாக வெளியீடு சார்ந்தோர் ஒரு சிலர் மட்டும்தான் பணத்தில் கொழிப்பா்.
:
புதியவர்களை வரவிடாமல் தடுக்கும் முயற்சியாகவே இதை பார்க்க வேண்டும்.
புதிய படங்களின் வரவு தான் பல குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும்.
பல புதிய திறமைசாலிகளை திரை உலகம் பெறும் சூழல் உருவாகும்.
பழைய படங்களை கொண்டாடுவதில் தவறில்லை .ஆனால் ,புதிய படங்கள் தான் பல திறமைசாலிகளை அடையாளம் காண செய்யும்.
திரைத்துறையை வளப்படுத்துவதற்கு வழி சமைக்கும்.பெரும் படத் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.
ஒரு சில நடிகர்களின், ஒரு சில படங்களுக்கு ஆயிரம் கோடிகளுக்கு மேல், செலவு செய்து எடுக்கின்ற படங்கள், தயாரிப்பாளர் தரப்பில் என்ன விதமான லாபத்தை ஈட்டி கொடுக்கும் என்று சொல்வதற்கு இல்லை. .
இரண்டு கோடி இல்லை 5 கோடி சிறிய படங்களை ஒரு பெரிய நிறுவனங்கள். தயாரித்தால் கலைஞர்கள் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைக்கும் என்பதை உணர வேண்டும்.
ஒரு பெரிய நடிகர் படத்தில் கிடைக்கும் லாபத்தை விட ...சின்ன படங்கள், நல்ல கதை அம்சத்தோடு வரக்கூடிய படங்களை, சரியாக வியாபார ரீதியாக திரை அரங்குகளுக்கு கொண்டு சேர்த்தால், எதிர்பார்க்காத வெற்றியையும் லாபத்தையும் பெரிய பட தயாரிப்பு நிறுவனங்கள் அடைய முடியும். ஆனால், அதற்கான முயற்சிகளை ,எந்த பெரிய நிறுவனங்களும் எடுக்க தயாராக இல்லை.
காரணம்,நூறு கோடிக்கு மேலே சம்பளம் வாங்குபவர்கள், பெரிய பட நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து உதவுகின்ற நிலை காணப்படுகிறது. அதனால்தான், அவர்களும் சின்ன படம்- புதிய அறிமுக நடிகர்களை- இயக்குனர்களை வைத்து படம்-எடுப்பதற்கு தயங்குகிறார்கள்
.
திரைப்பட தேக்கம் என்பது 90க்கு பிறகு மிக வலுவாக இருப்பதின் காரணமாக,தமிழ் திரை உலகம் ஒர்ஆரோக்கியமான பாதையை நோக்கி எப்பொழுது பயணிக்கும் என்பது தான் கேள்வி...
.
Tags :