வாகனங்களை மின்னேற்றம் செய்ய சிமென்ட் சாலை

by Editor / 19-09-2021 11:57:34am
வாகனங்களை மின்னேற்றம் செய்ய சிமென்ட் சாலை

அதில், அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் 'மேக்மென்ட்' நிறுவனமும் நடத்தும் ஒரு ஆய்வு குறிப்பிடத்தக்கது.தற்போது மொபைல் சாதனங்களுக்கு 'வயர்லெஸ் சார்ஜிங்' முறை உள்ளது. இதையே வருங்காலத்தில் மின் வாகனங்களுக்குப் பயன்படுத்தலாம்.

ஆனால், அவற்றுக்கென, 'இன்டக்சன் சார்ஜிங்' நிலையங்களை நிறுவ வேண்டும்.அதற்கு மாறாக, பெரைட் துகள்களைக் கலந்த சிமென்ட் சாலைகளைப் போட்டுவிட்டால், அதே வயர்லெஸ் சார்ஜிங் முறையில், காந்தப் புலம் மூலம், வாகனங்களை மின்னேற்றம் செய்யலாம் என்கின்றனர், மேக்மென்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள்.இந்த முறையில், வண்டிகளை நிறுத்தாமல் ஓட்டியபடியே மின்னேற்றம் செய்ய முடியும். என்றாலும், இதிலுள்ள நடைமுறை சவால்களை நீக்க மேக்மென்ட் நிறுவனம் ஆய்வுகளை தொடர்கிறது.

 

Tags :

Share via