செய்தி நிருபரை தாக்கிய கும்பல் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

சேலம் மாவட்டம் வில்லியம்பட்டி பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதை செய்தி சேகரிக்க சென்ற தனியார் செய்தி நிருபரை, ஒரு கும்பல் தாக்கியது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “செய்தி சேகரிக்க சென்றவரை அடிக்கும் தைரியம் மண் திருடர்களுக்கு எங்கிருந்து வந்தது?. தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக மிகச் சரியாக நிறைவேற்றி வரும் வாக்குறுதி அந்த கனிமவளக் கொள்ளை மட்டும் தான்” என்றார்.
Tags :