ஈரானியர்களின் மரணத்திற்குப் பழிவாங்கப் போவதாகபுதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனிஅறிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார். அதில் ,அவர் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பது மற்றும் அமெரிக்க தளங்களை இலக்கு வைப்பது குறித்த கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தார். உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு கருவியாக ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அவர் அறிவித்தார். இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும், இல்லையெனில், அவை ஈரானால் தொடர்ந்து தாக்கப்படும் என்றும் அவர் சபதம் செய்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது தந்தை அயதுல்லா அலி காமெனி மற்றும் பிற ஈரானியர்களின் மரணத்திற்குப் பழிவாங்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.தங்களுக்கு ஏற்பட்ட போர் பாதிப்புகளுக்கு எதிரிகளிடமிருந்து இழப்பீடு பெறப்படும் என்றும், அதற்கு அவர்கள் மறுத்தால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் அல்லது அழிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்
Tags :


















