முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சென்னையில் இருந்து ஆக., 30ஆம் தேதி புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலில் இங்கிலாந்துக்கும், தொடர்ந்து ஜெர்மனிக்கும் செல்கிறார். செப்., 08ஆம் தேதி சென்னை திரும்புகிறார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் துறை அதிகாரிகளும் செல்ல உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.