மலை உச்சியில் கார்த்திகை தீபம் கோலாகலமாக ஏற்றப்பட்டது..
இன்று சரியாக ஆறு மணி அளவில் திருவண்ணாமலையில் 2,688 அடி மலை உச்சியில் கார்த்திகை தீபம் கோலாகலமாக ஏற்றப்பட்டது. பக்தர்களிடையே அரோகரா என்கிற சிவகோஷம் விண்ணை அதிர வைத்தது. தீபம் ஏற்றிய உடன் சில நிமிடங்களிலேயே மழை பொழிய ஆரம்பித்தது. பஞ்சபூத அக்னி தளத்தில் வர்ம பகவானின் வாழ்த்துக்களோடு தீபத்திருநாள் கொண்டாட்டம் நிறைவு பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் ஜோதிபிழம்பாக காட்சி தந்த சிவனின் தீபத் திரு விழாவில் பங்கேற்று பாக்கியம் பெற்றதாக புகழாரம் சூட்டி... அருணாச்சலேஸ்வரரை தரிசித்து இல்லம் நோக்கி திரும்ப ஆரம்பித்தனர்.
Tags :


















