மாணவர்களுக்கு வழங்குவதற்காக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துள்ளது. 2025_26 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் பொறியியல் வேளாண்மை மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு முதல் கட்டமாக 10 லட்சம் லேப் டாப்கள் வழங்கப்பட உள்ளன .அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.. எல்காட், டெல், ஹெச்பி, ஏசர் நிறுவனங்களிடமிருந்து இந்த லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 2025 குள் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கலாம் என்றும் 2026 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள்ளாக அனைத்து மாணவர்களுக்கும் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக தகவல். இந்த லேப் லேப்டாப்கள் முதல் கட்டமாக அரசு கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு நிறைவு செய்யும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்பட உள்ளது. தொழில்நுட்பத் துறையில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் முகமாக இந்த லேப்டாப்புக்களில் இன்டல் கோர் 13 ,அல்லது ஏ எம் டி ரேசன், ப்ராசசர் .8 ஜிபி ரேம் ,,256 ஜிபி எஸ் ,எஸ் டி ஸ்டோரேஜ் அனைத்தும் அதில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கும்.. மாணவர்களுக்கு கல்லூரி வழியாக இந்த லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன.
Tags :


















