அதிபர் கிம் ஜோங் உன் அதிரடி அறிவிப்பு.

by Staff / 30-03-2022 04:07:02pm
அதிபர் கிம் ஜோங் உன் அதிரடி அறிவிப்பு.

அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை உருவாக்க வட கொரியா  திட்டமிட்டு உள்ளதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்க் உன் அறிவித்துள்ளார்.
 
வடகொரியா கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய மற்றும் நீண்ட தூரம் செல்லும் அதிநவீன ஏவுகணையை கடந்த 24ம் தேதி சோதித்தது. 

அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமை படைத்த ஹவாசோங்- 17 என்ற  ஏவுகணை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இதனை பார்வையிட்ட கிம் ஜோங், ஏவுகணை திட்டத்தில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பாராட்டினார். அப்போது பேசிய அதிபர், அமெரிக்கா கூட வடகொரியா மீது படையெடுக்க பயப்படுவதாகவும், இன்னும் சக்தி வாய்ந்த பல ஆயுதங்களை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via