கோவை, திருப்பூர் உள்பட 8 மாவட்டங்களில்  ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி

by Editor / 29-05-2021 05:23:53pm
கோவை, திருப்பூர் உள்பட 8 மாவட்டங்களில்  ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி

 


கோவை உள்பட 8 மாவட்டங்களை தவிரபிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனொ தொற்று பாதிப்பு 31 ஆயிரமாக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பாதிப்புகள் அதிகமாக காணப்பட்டு வந்த சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரானா பாதிப்பு உச்சத்திலேயே இருந்து வருகின்றன.
எனவே, பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், அதிக பாதிப்புகள் இருக்கும் மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ள கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
அதே போன்று அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை ஊழியர்கள் ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி கட்டாயமாக போடப்பட்டிருக்க வேண்டும் என அரசு உத்தரவில் கூறியுள்ளது. மேலும், தொழிற்சாலைகளுக்கு நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே அழைத்து செல்ல வேண்டும் என்ற விதி தொடர்கிறது.

 

Tags :

Share via