வரதட்சணை கேட்கும் கணவரை  கண்டித்து  பெண் வழக்கறிஞர் போராட்டம் 

by Editor / 23-07-2021 04:31:30pm
வரதட்சணை கேட்கும் கணவரை  கண்டித்து  பெண் வழக்கறிஞர் போராட்டம் 

கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (28). வழக்கறிஞரான இவருக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவி பேராசிரியர் ராஜ ஷெரினுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம், சொத்துகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு ராஜ ஷெரினின் குடும்பத்தினர் பிரியதர்ஷினியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், பிரியதர்ஷினியை வீட்டில் தவிக்க விட்டு ராஜ ஷெரின் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதையடுத்து, கணவரின் வீட்டிற்கு சென்ற பிரியதர்ஷினி தன்னை வீட்டுக்குள் அனுமதிக்குமாறு கூறி வீட்டின் முன்பு கதறி அழுதார். தகவலறிந்து வந்த தக்கலை காவல்துறையினர், பிரியதர்ஷினியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பிரியதர்ஷினி தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு கூறி கொட்டும் மழையில் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்.

 

Tags :

Share via