கேரளாவில் இரண்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட், ஏழு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட்.

by Editor / 18-05-2024 08:39:39am
கேரளாவில் இரண்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட், ஏழு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட்.

கேரளமாநிலத்திலுள்ள மலப்புரம்,பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும்,திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டு உள்ளது,கடல் சீற்றம் அதிக அளவில் இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.இன்று இரவு 11.30 மணி வரை 0.4 முதல் 1.2 மீட்டர் உயர அலைகள் மற்றும் புயல் எழும்பும் வாய்ப்பு உள்ளது, வேகம் வினாடிக்கு 16 செமீ முதல் 48 செமீ வரை மாறுபடும். புயல் அலை வீச வாய்ப்புள்ளதாகவும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கடல் சீற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, அபாய பகுதிகளை விட்டு மக்கள் விலகி இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags : கேரளாவில் இரண்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட், ஏழு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட்.

Share via