12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நீக்கம்; மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு.

12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நீக்கம்; 5%, 18% மற்றும் 40% ஜிஎஸ்டி வரி நடைமுறையில் இருக்கும்.
டெல்லியில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்,தனிநபர் மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கு GST வரியிலிருந்து முற்றிலும் விலக்கு.
ஏசி மற்றும் LED TV-களுக்கான வரி விகிதம் 28% லிருந்து 18% ஆக குறைப்பு, தலைக்கு தேய்க்கும் எண்ணெய், சோப்பு பார்கள், ஷாம்பு, பிரஷ் , பற்பசை, மேஜைப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் அனைத்துக்கும் ஜிஎஸ்டி வரி 5% ஆகக் குறைப்பு.
3 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு இதுவரை 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றிற்கு பூஜ்ஜியம் ஜிஎஸ்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது, சிகரெட், பீர் வகைகளுக்கு 40% GST
Tags : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு.