புனலூர் - கொல்லம் புதிய மின்மய அகல ரயில் பாதையை பிரதமர் திறந்து வைத்தார்.
இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை கோட்டத்தில் பல்வேறு அகல ரயில் பாதைப்பிரிவுகள் மின்மயமாக்கம் செய்யப்பட்டுவிட்டன.சமீபத்தில் மதுரை கோட்ட எல்கைக்குள் உள்ள கேரள மாநிலப்பகுதியான புனலூர் - கொல்லம் அகல ரயில் பாதை ரூபாய் 76 கோடி செலவில் மின்மயமாக்கம் செய்யப்பட்டது.இந்த புதிய மின்மயப்பாதையை கேரள மாநிலம், கொச்சியில் இன்று (செப்.01) மாலை 6 மணியளவில் நடைப்பெற்ற அரசு விழாவில் மக்கள் பயன் பாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி. இந்தப் புதிய ரயில் பாதையை தொடங்கி வைத்தார்.மேலும்,ஒரு சிறப்பு ரயிலையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து செப். 2ஆம் தேதி நாளை முதல் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் கொல்லம் - புனலூர் இரண்டு ரயில்கள், சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படுவது போல மின்சார ரயில் தொடர் மூலமும் இயக்கப்பட இருக்கிறது.
Tags :