பெருமைமிகு சென்னையின் சரித்திரம்
பெருமைமிகு சென்னையை கொண்டாடும் வகையில் 2004 ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் தினம் என்றும் சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஒருவாரத்துக்கு கொண்டாடப்பட்டுவருகிறது.தமிழகத்தில் இருந்து வடக்கே பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் முக்கிய முனையமாக திகழும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 1873ம் ஆண்டு தான் உருவாகியது. பின்னர் 1959, 1998ல் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. முதல் முதலாக 1856ல் ராயபுரம் முதல் ஆற்காடு வரை ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 17 பிளாட்ஃபார்ம்களுடன் 30 வழித்தடங்களை கொண்டுள்ளது.
சென்னை புறநகர் ரயில் சேவை 1931ம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கசென்னை எழும்பூர் ரயில் நிலையம் 1905 ஆண்டு தான் தொடங்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையம் ஆரம்பித்து தோராயமாக 33 ஆண்டுகளுக்கு பிறகு எழும்பூர் ரயில் நிலையம் உருவாகியுள்ளது. தற்போது இதில் 15 பிளாட்ஃபார்ம்களுடன் 22 வழித்தடங்களை கொண்டுள்ளது. எழும்பூர் வழித்தடத்தில் உள்ள தாம்பரத்தில் இருந்தும் சமீபகாலமாக வெளியூர் செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையின் 3வது ரயில் நிலையம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது தாம்பரம் ரயில் முனையம்.
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரை 13 கி.மீ நீளம் கொண்டது. பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறும் இடமாகவும், குடும்பத்துடன் சென்று குதூகலிக்க, காதலர்கள் உலா வர என பலதரப்பட்ட மக்களுக்கு மெரினா நல்ல பொழுதுபோக்காக இருப்பது அனைவரும் அறிந்ததே. மெரினாவை சுற்றியுள்ள சாலை 1885ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் மிகப்பழமையான நீதிமன்றம் என்ற புகழைப்பெற்ற மெட்ராஸ் ஹைகோர்ட் உருவாக பிரிட்டிஷ் குயின் ராணி விக்டோரியா 26, ஜூன் 1862ல் அனுமதி அளித்தார். ஆனால் 1892ல் தான் தற்போதுள்ள கட்டிடம் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
ரிப்பன் பில்டிங்1909ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1913ம் ஆண்டு வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது. இதனை லோகநாத முதலியார் என்பவர் ரூ.7,50,000 செலவில் காட்டிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனை உருவாக்க பிரிட்டிஷின் ரிப்பன் பிரபு முக்கிய காரணமாக இருந்ததால் அவரது நினைவாக 'ரிப்பன் கட்டிடம்' என பெயரிடப்பட்டது. சென்னை மாநகராட்சியின் அனைத்து முக்கிய அலுவல்களும் இங்கு தான் நடைபெறுகின்றன.
1857ல் உருவாக்கப்பட்ட மெட்ராஸ் யூனிவர்சிட்டி இந்தியாவின் மிகப்பழைமையான பல்கலைக்கழகமாகும். தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாக தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம். முன்னதாக 1840ம் ஆண்டு காலகட்டத்தில் மெட்ராஸ் ப்ரெசிடென்சி கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தான் சென்னை பல்கலைக்கழகம் உருவாகியது குறிப்பிடத்தக்கது.
Tags :