1000வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி!

by Editor / 07-02-2022 09:12:55am
1000வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி!

அகமதாபாத் நகரில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.


முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித் 51 பந்துகளில் 60 ரன்களை சேர்த்து அவுட்டானார். கோலி, இஷான் கிஷன் மற்றும் பண்ட் என மூவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இதில் இஷான் கிஷன் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் ஹூடா இணையர் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யகுமார் 34 ரன்களுடனும், தீபக் ஹூடா 26 ரன்களுடனும் களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர். 28 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 178 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது. அதோடு ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது இந்தியா அணி. இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.

 

Tags :

Share via