2011- வது தேர்தலில் கூட்டணியில் ம.தி.மு.க இடம்பெறாமல் போனதற்கு ஓ .பன்னீர் செல்வம் தான் காரணம்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டு
இன்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ தம் கட்சியினர் முன்னிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் குறித்தான விமர்சனத்தை வைத்தார்..கூட்டணி குறித்து பேசுவதற்கு செங்கோட்டையன் ,ஜெயக்குமார் வந்திருந்தனர்.. நான் .பன்னீர்செல்வத்தின் போனிற்காக காத்திருந்தேன்.. ஆனால் ,அழைப்பு வரவில்லை.. அதற்கு காரணம் ஓ.பி.எஸ் ..அ.தி.முக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் நான் கூட்டணிக்கு வர விரும்பவில்லை என்று தெரிவித்ததாக தகவல் அறிந்தேன்.. அந்தத் தேர்தலில் ம.தி.மு.க புறக்கணிப்பதாக செய்திகள் கொடுத்து விட்டேன் .ஆனால் ,. 2011- வது தேர்தலில்,உண்மையில் நடந்தது கூட்டணியில் ம.தி.மு.க இடம்பெறாமல் போனதற்கு ஓ .பன்னீர் செல்வம் தான் காரணம். .அதற்கான விளைவைத்தான் அவர் இப்பொழுது அனுபவித்து வருகிறார் என்றும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
Tags :


















