வைகோ தம் கட்சியினர் முன்னிலையில் விஜய் மீது சரமாரி தாக்கு,
இன்று சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ தம் கட்சியினர் முன்னிலையில் விஜய் மீது சரமாரி தாக்கு,
செப்டம்பர்- 27 அன்று கரூரில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டிய விஜய், பொறுப்பற்று திசை திருப்புவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்..அரசியல் நாகரிகமற்ற பேச்சு: த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது வெறுப்பையும், கசப்பையும் கொட்டித் தீர்த்துள்ளதாகவும், இது அரசியல் நாகரிகமற்ற செயல் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்..கரூர் சம்பவத்திற்கு விஜய் துளியளவும் வருத்தப்படாமல், குற்ற உணர்ச்சியே இல்லாமல்சம்பவம் நடந்தவுடன் ஏன் திருச்சியில்கூடஇருக்காமல்சென்னைசெல்லவேண்டும்.. மிகத் தவறான போக்கு என்று அவர் சாடியுள்ளார்."காகிதக் கப்பலில் கடல் தாண்டுகிறார்": பொது வாழ்வில் ஆத்திச்சூடியே அறியாத விஜய், "காகிதக் கப்பலில் கடல் தாண்ட" முற்படுவதாகவும், அவரது அரசியல் கனவுகள் கானல் நீராகிவிடும் என்றும் வைகோ விமர்சித்துள்ளார்..திமுக கூட்டணியிலுள்ள கட்சிகளை விஜய் விமர்சித்தது கண்டனத்திற்குரியது என்றும் திமுகமீது குற்றம் சுமத்த முனைகிறாா் என்றும் வைகோ கூறியுள்ளார்.
Tags :


















