நடிகையின் சம்மதத்துடன் தான் கருக்கலைப்பு முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

by Editor / 06-07-2021 07:10:18pm
நடிகையின் சம்மதத்துடன் தான் கருக்கலைப்பு  முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

 

 

பிரபல நடிகையான சாந்தினி அளித்த புகாரின் பேரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகையின் சம்மதத்துடன் தான் கருக்கலைப்பு நடந்தது என விசாரணையில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு தற்போது மிரட்டுவதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார்.மேலும் அந்த புகாரில், மூன்று முறை கருக்கலைப்பு செய்து, தற்போது தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி பெங்களூருவில் தலைமறைவாகியிருந்த மணிகண்டனை கைது செய்தனர்.

இந்நிலையில் விசாரணையின் போது, சாந்தினியின் சம்மதத்துடன் தான் தாங்கள் குடும்பம் நடத்தியதாகவும், ஆனால் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவேன் என நான் மிரட்டவில்லை எனவும் மணிகண்டன் கூறினாராம்.மேலும், நடிகையின் சம்மதத்துடன் மட்டுமே கருக்கலைப்பு நடந்தாகவும் கூறியுள்ளாராம்.

இதற்கிடையே மணிகண்டனின் செல்போனை ஆய்வு செய்த போலீசார், சாந்தினியுடன் எடுக்கப்பட்ட அந்தரங்க வீடியோக்கள், படுக்கையறை காட்சிகள் மற்றும் மது அருந்தும் வீடியோக்களை மீட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

 

 

Tags :

Share via

More stories