அரசு பங்களாவை காலி செய்யாத தனபால்
அதிமுக அமைச்சர்கள் பலரும் அரசு பங்களாக்களை காலி செய்து விட்ட நிலையில் முன்னாள் சபாநாயகர் தனபால் இன்னமும் அரசு பங்களாவை காலி செய்யவில்லையாம். அந்த அரசு பங்களா தான் தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு ஒதுக்கி இருக்கிறது பொதுப்பணித்துறை.
தாமாக முன்வந்து அரசு பங்களாவை காலி செய்யாததால் பொதுப்பணித்துறை காலி செய்ய உத்தரவிட்டு அவருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. நோட்டீஸ் அனுப்பிய பின்னரும் கூட தனபால் இன்னமும் அரசு பங்களாவை காலி செய்யவில்லையாம். இதனால் தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு பங்களாவை ஒதுக்க முடியாமல் பொதுப்பணித்துறை தவிப்பில் இருக்கிறது.
Tags :