நிலப்பிரச்சனையில்  விவசாயி தலையில் வெட்டு 

by Editor / 24-07-2021 07:15:51pm
நிலப்பிரச்சனையில்  விவசாயி தலையில் வெட்டு 

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது ஆட்கொண்டார்குளம் எனும் கிராமம். இங்குள்ள விவசாயி சுப்பையாவின் மகன் தங்கராஜ். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்தவரும் சங்கரன்கோவிலில் குடியிருப்பவருமான மருதையா என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது. பலமுறை பலர் பஞ்சாயத்து பேசியும் நிலப்பிரச்சனை முடிவுக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பகைமை இருந்து வந்திருக்கிறது.
இந்த நிலையில்  தங்கராஜைத் தேடி மருதையா ஆட்கொண்டார்குளம் சென்றார். தங்கராஜ் அவரது விவசாய நிலத்தில் இருப்பது தெரியவர அங்கே மருதையா சென்றிருக்கிறார்.

அந்த சமயம் இருவருக்குமிடையே மீண்டும் நிலம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமான மருதையா திடீரென, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தங்கராஜின் நெற்றி பக்கம் வெட்டியிருக்கிறார். படுகாயமடைந்த தங்கராஜ் அலறிக்கொண்டு கீழே விழ, மருதையா அங்கிருந்து தப்பியிருக்கிறார். தங்கராஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

 

Tags :

Share via

More stories