புயல் அலார்ட் : கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

by Staff / 01-12-2023 12:33:13pm
புயல் அலார்ட் : கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

மிக்ஜாம் புயல் உருவாகி தமிழகத்தை நோக்கி கரையை கடக்கும், இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் 12 மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு தங்கும் வசதி, உணவு வழங்கிட சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்ய வேண்டும். மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். மேலும் அனைத்து அரசு அதிகாரிகளையும் புயலுக்கு தயார் படுத்தி வருகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo