ஆத்திரத்தில் கத்தியால் குத்திய கணவன்...கோவையில் நேர்ந்த சோகம்

கோவை செல்வபுரம் பிரியா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ராமநாதன் - அனுராதா தம்பதி. இதில் ராமநாதன் சரியாக வேலைக்கு செல்லாததால், கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ராமநாதன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி அனுராதாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த அனுராதா, சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன் ராமநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags :