20 லட்ச ரூபாய் கொள்ளையடித்த சென்ற 7பேர் கைது செய்யப்பட்டனர்.

by Admin / 21-01-2022 05:29:20pm
 20 லட்ச ரூபாய் கொள்ளையடித்த சென்ற 7பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு காந்திநகர் பகுதியில் சேர்நத கல்குவாரி உரிமையாளர் பஞ்சலிங்கம் என்பவர் வீட்டில் கடந்த 15ஆம் தேதி சொகுசு காரில் வந்த நபர்கள் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் இருந்த 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் காசோலைகள் ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். 

இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பஞ்சலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கோவை ஈச்சனாரி புறவழிச்சாலை பகுதியில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்தவர்கள் கிணத்துக்கடவில் கல் குவாரி உரிமையாளர் வீட்டில் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரில் வந்த கோவை சங்கனூர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார்(36), கோவை சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(37), கோவை கணபதி பகுதியை சேர்ந்த மோகன்குமார்(30) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 3 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
 
மேலும் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் பணத்தைக் கொள்ளையடிக்க உதவியாக இருந்த கிணத்துக்கடவு மதுரைவீரன் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ்(36), பேரூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி(47), பகவதி பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (47) காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த முக்கிய குற்றவாளிகளான கோவை பகுதி ரத்தினபுரி பகுதியை சேர்ந்த மேத்யூ(60), காரணம்பேட்டை பகுதியை சேர்ந்த மகேஸ்வரன், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பைசல் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


 

 

Tags :

Share via

More stories

Logo