சிறுமியை கடத்தி சென்று கற்பழித்து கர்ப்பமாகிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அருங்குணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ( 35). இவர் கடந்த 2018-ம் ஆண்டு 15 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார், இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி 2 மாதம் கர்ப்பமானார், சிறுமியின் பெற்றோர் இது குறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்,
இது குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அரசு சிறப்பு வழக்கறிஞராக புவனேஸ்வரி ஆஜரானார்.
இந்த நிலையில் இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து கர்ப்பமாக்கிய சதீசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சதீசுக்கு திருமணம் ஆகிவிட்டது. மேலும் இவர் மீது மற்றொரு போக்சோ வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : சிறுமியை கடத்தி சென்று கற்பழித்து கர்ப்பமாகிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை.