தங்கம், வைரம், வைடூரியத்தால் ஆன 27 கிலோ நகைகள். 1,526 ஏக்கர் நில ஆவணம் ஒப்படைப்பு.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க, வைர நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி நேற்று துவங்கியது. பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் முன்னிலையில், மூன்று பெட்டிகளில் இருந்த நகைகள் எண்ணி சரிபார்க்கப்பட்டன.அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், வைடூரியத்தால் ஆன 27 கிலோ நகைகள், மதிப்பீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.மேலும் தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜெயலலிதாவின் 1,526 ஏக்கர் சொத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன.
Tags : தங்கம், வைரம், வைடூரியத்தால் ஆன 27 கிலோ நகைகள். 1,526 ஏக்கர் நில ஆவணம் ஒப்படைப்பு