ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழப்பு.

புது டெல்லி ரயில் நிலையத்தில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜுக்கு இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில், இரவு 10 மணியளவில் நடைமேடை 14-ல் புறப்பட தயாராக நின்றிருந்தது.அந்த நேரத்தில் ஏராளமான பயணிகள் 14 ஆவது நடை மேடையில் நின்றிருந்தனர். பயணிகள் காத்திருந்த அந்த நேரத்தில் ஸ்வதந்திரா சேனானி விரைவு ரயிலும், புவனேஷ்வர் ராஜ்தானி ரயில்களும் தாமதாக இயக்கப்படுவதாக ரயில் நிலையத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Tags : ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழப்பு.