நேபாள பிரதமரின் மனைவி மாரடைப்பால் மரணம்

நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹாலின் மனைவி சீதா தஹால் (69) மாரடைப்பால் காலமானார். நார்விச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இந்த விஷயத்தை பிரதமரின் குடும்ப மருத்துவர் டாக்டர் யுபராஜ் சர்மா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்று காலை 8 மணியளவில் இது குறித்து அறிவிக்கப்பட்டது. அவர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், மாரடைப்பால் இறந்ததாகவும் அவர் கூறினார். அவரது மறைவுச் செய்தி அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags :