கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய சிறுவன் உட்பட 5 பேர் கைது.

by Editor / 07-02-2025 08:06:54am
கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய சிறுவன் உட்பட 5 பேர் கைது.

திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பாரதிபுரம், டிப்போரோடு பகுதியில் உள்ள குளத்தின் அருகே உள்ள முட்புதரில் மாதவன்(28),  பாபேஸ்ராஜா(19),  நேவின்ராஜ்(20), சத்ரியன்(19) மற்றும் 17 சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கத்தி, உருட்டுகட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய சிறுவன் உட்பட 5 பேர் கைது.

Share via