மான் வேட்டைக்கு சென்ற 6 பேர் கைது
ஆத்தூர் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் ஏத்தாப்பூர் அருகே உள்ள பனைமடல் மண்ணூர் காப்புக்காடு, இரட்டை குச்சி மலை ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் ஒரு நாட்டுத்துப்பாக்கியுடன் காப்பு காட்டுக்குள் டார்ச் லைட் வெளிச்சத்தில் வனவிலங்குகளை வேட்டையாட வருவதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். உடனே அந்த 6 பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் 6 பேரையும், ஆத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் பிடிபட்டவர்கள் மான் அல்லது முயல் ஏதேனும் வனவிலங்குகள் வேட்டையாட சென்றதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்கள், மண்ணூர் காப்புக்காடு பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 46), மகேந்திரன் (38), தியாகராஜன் (32), பொன்னுசாமி (62), மணிகண்டன் (46), ஜெகன் (32) ஆகிய 6 பேர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறையினர் ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி 6 பேரையும் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.
Tags :