விஜய்யின் சொகுசு கார் வழக்கு முடித்து வைப்பு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி எம்எஸ் சுப்பிரமணியம் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அபராதம் விதித்து நீதிபதி அளித்த தீர்ப்பின் நகல் இல்லாமல் விஜய்யின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடபடவில்லை.
இந்நிலையில் தனி நீதிபதிகள் தீர்ப்பு நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட கோரி விஜய் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூடுதல் மனு இன்று நீதிபதி எம். துரைசாமி, ஆர். ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இருப்பினும் சொகுசு கார் நுழைவு வரி தொடர்பான வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை நிவாரண நிதியாக தர விருப்பம் இல்லை என்று நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்திவிட்டு அறிக்கை தர உத்தரவிட்ட வழக்கு விசாரணையில் கடந்த ஆண்டு ஏற்கனவே கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளோம் என விஜய் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
Tags :



















