அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் - அங்கீகரித்த தேர்தல் ஆணையம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தேர்தல் ஆணைய இணையதளத்தில் இன்று பதிவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணைய இணையத்தில் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக முழுமையாக அங்கீகரித்ததை காட்டுவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :


















.jpg)
