உறவுகளைப்பேணுங்கள்.
நம்மோடு பிறந்த ரத்த சம்பந்தமுள்ள திருமண பந்தத்தோடு வந்த உறவுகள் அனைவரையும் ஆராதிக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால், பணம், பதவி , படிப்பு இன்ன பிற ... நம்மவர்களை ஆக்டோபஸ் கரங்களாக ....மற்றவர்களோடு நெருங்க விடாது இறுக்கி பிடித்துக் கொண்டு.. தனிமையில் திமிரோட வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் ரத்தம் சுண்டி போய்... உடலாலும் மனதாலும் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்த இன்னபிற.. புற நிலை செல்வாக்கும் அற்ற நிலையில்.. மனம் வெதும்பி ... ஐயோ, நாம் இப்படி செய்து விட்டோமே என்று அலறக்கூடிய, அந்த கடைசி காலகட்டத்தில்... நினைத்து பார்த்து... நினைத்துப் பார்த்து.. நொந்து கொண்டிருப்பதை விட... நாம் வாழும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் பயன்படக்கூடிய ஒரு நபராக நாம் இருக்க வேண்டும். அவர் எனக்கு எதுவுமே செய்யவில்லை. நானும் அவரோடு தான் பிறந்தேன் என்னை கொஞ்சம் கை தூக்கி விட்டிருந்தால், நான் உயர்ந்திருப்பேன். ஆனால், நான் வளர்வதை அவர் விரும்பாமல் என்னை அன்னியப்படுத்தி வைத்ததோடு... என் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டார் என்று சொல்கிற ஆதங்கப் பேச்சுக்களை நாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றோம்
. கிராமப்புறங்களில், நம் உறவுகளால் தான் நாம் பலம் பெற்று இருக்கின்றோம் என்று எண்ணுவதை விட்டுவிட்டு ...அவர்களால்தான், நமக்கு துன்பங்களும் துயரங்களும் வருகின்றன என்று தவறாக நினைத்து... தன்னை..தானே வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள் அதிகம்
. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் பொழுது அவனுக்கு உதவி செய்யாமல் விட்டோமே என்று வருந்துவதை விட ...அவருக்கு செய்து, அவர் நம்மை பழிதூற்றி ஒதுக்கி விட்டாலும்... ஒரு காலகட்டத்தில், அவர் உணர்கிற பொழுது... நாம் அந்த மனிதனுடைய இதயத்தின் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்து இருப்போம். எதை செய்ய வேண்டுமோ, அதை செய்து விடுங்கள். .
நம் பாதையில் மலர்களை தூவிச் செல்வோம். திரும்பி வருகையில் ,நம் கால்களை எந்த முட்களும் குத்தி சேதப்படுத்தாது
.நல்லதை செய்தால் நாலு பேர் பாராட்டுவார்கள் என்று நினைத்து செய்யாதீர்கள்
. நல்ல உள்ளத்தோடு உறவுகளுக்கு முடிந்த அளவு உதவி செய்யுங்கள்.
வழிகாட்டுங்கள்.
அவர்கள், நம் உதவியை ஒரு பெரும் பொருட்டாக நினைக்காமல், நம் மீது குற்றம் சுமத்தினாலும் பரவாயில்லை.
உங்களால் ,எது முடியுமோ, அதை செய்து முடியுங்கள்.
செய்ய முடியாததை நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் தேவையில்லை.
அதற்காக வருத்தப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
உறவுகளுக்கு கஷ்டம் வருகிற நேரத்தில் நம்மால் முடிந்த உதவிகளை செய்து ..கை தூக்கி விட்டு பார்ப்போம். அவர்கள் உயர்வதும் தாழ்வதும் அவர்களுடைய உழைப்பும் எண்ணத்தையும் பொறுத்துத்தான். . அதனால், உங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு சின்னதாக இருந்தாலும் செய்து விடுங்கள்.
செய்கிற சந்தர்ப்பம் இருக்கின்ற பொழுது செய்து விட்டால் நிம்மதி இருக்கும் .செய்ய முடியாத சந்தர்ப்பத்தில் செய்யவில்லையே என்று வருத்தப்படுவதில் பிரயோஜனம் இல்லை.
உறவுகளுக்குள்ளே தான் பெரும் சிக்கல்களே இருக்கின்றன.
தன்னைவிட இவன் பெரியவனாக வளர்ந்து விடுவானோ என்று எண்ணாமல் அவன் நம்மலில் ஒருத்தன் தானே... அவன் உயர் நிலையை அடைந்தால், நம்மவன் என்று சொல்லிக் கொள்வதற்கு வழி இருக்கும்.
அவனை விழ்த்திவிட்டு, அவன் தாழ்ந்து விட்டான் என்று சொல்லி வேதனைப்படுவதோ,... இல்லை, .பெருமைப்படுவதோ அர்த்தம் மற்றது.
அதனால், நம்மால் முடிந்த அளவிற்கு ஒருவரை கை தூக்கி விட பார்க்க வேண்டும்.
பலர், தம் உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்யாமல்... திமிராக இருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
இவன் எங்கே நம்மை விட வளர்ந்து விடுவானோ ...வசதி வாய்ப்புகளை பெற்று விடுவானோ என்று அவனை அழிக்கும் முகமாக என்னெல்லாம் கேடுகெட்ட செயலை செய்ய வேண்டுமோ... அதை எல்லாம் செய்யக்கூடியவர்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்
. உலகம், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. புராண -இதிகாச கதைகளிலே நிறைய இது போன்ற சம்பவங்கள் எல்லாம்.... சின்ன கதைகளாக சொல்லப்பட்டு... காலம் காலமாக வழக்கத்தில் நின்றவை .எல்லாம் உண்டு. சீதையைத் தேடி ராமன் கடலிலே பாலம் அமைக்கின்ற பொழுது அணிலும் மணலை சுமந்ததாக சொல்லி அதை பாராட்டு முகமாக கையால் தடவி கொடுத்ததே மூன்று கோடுகள் என்று நம்மவர்கள் அந்த அணிலை இன்றளவும் நாம் மரியாதையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அணில் கடித்த கொய்யாப்பழம் ருசியாக இருக்கும் என்று சொல்லி... அதன் எச்சில் பழத்தை விரும்பி சாப்பிடுகின்ற மக்களும் இருக்கிறார்கள்.. வேறு எந்த விலங்குகளோ ..இல்ல.. பறவைகளோ. சாப்பிட்ட கனிகளை மனிதர்கள் இதுபோன்று சொல்லி சாப்பிட்டதாக தெரியவில்லை.
அதனால் சின்ன உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
நன்றி பாராட்டாமல்.. பழித்து தூற்றினாலும் கவலை படாதீர்கள்
நீங்கள் விதைத்த விதை நல்ல விதை. அதன் பலன் உங்களுக்கு நிச்சயம் இயற்கை வழங்கும்.
Tags :