ஹெலிகாப்டரில் இருந்து பணத்தை கொட்டிய நடிகர்

by Staff / 26-10-2023 01:13:07pm
ஹெலிகாப்டரில் இருந்து பணத்தை கொட்டிய நடிகர்

செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான கமில் பார்டோசெக் என்பவர் ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கமில் பார்டோஷேக் மக்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தை அளித்துள்ளார். ஹெலிகாப்டரில் இருந்து 1 மில்லியன் டாலர் பணத்தை மக்களுக்கு வீசியுள்ளார். பணம் கொட்டும் பகுதிக்கு மக்கள் பைகளுடன் வந்து பணத்தை எடுத்துச் சென்றனர். உலகின் முதல் பண மழையின் வீடியோவை கமில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via