டிராக்டர் ஆபத்தான பயணம்..

by Staff / 15-03-2023 12:49:52pm
டிராக்டர் ஆபத்தான பயணம்..

இதுவரை சாலைகளில் பைக் மற்றும் கார்களை வைத்து ஆபத்தான ஸ்டண்ட் செய்வதை பார்த்திருக்கிறோம். இருப்பினும், சமீபத்தில் ஒரு நபர் கரும்பு ஏற்றிய டிராக்டரை சாலையில் முன்பக்க டயர்களை உயர்த்தி ஆபத்தான முறையில் பின் சக்கரங்களை மட்டும் சாலையில் வைத்து ஓட்டிச் சென்றார். இச்சம்பவம் எங்கு நடந்தது என்று தெரியவில்லை என்றாலும் அந்த வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக பரவி வருகிறது. இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க வேண்டாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via