ராமர் கோயில் திறப்பு விழா - காங்கிரஸ் புறக்கணிப்பு

by Staff / 10-01-2024 05:01:47pm
ராமர் கோயில் திறப்பு விழா - காங்கிரஸ் புறக்கணிப்பு

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கோயில் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும்போதே, தேர்தல் ஆதாயத்துக்காக இப்போதே திறப்பு விழா நடத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் துடிக்கின்றன. அயோத்தி ராமர் கோயிலை அரசியல் திட்டமாக ஆர்எஸ்எஸும் பாஜகவும் மாற்றிவிட்டதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பை சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

 

Tags :

Share via