அதிகரிக்கும் புவி வெப்பமயமாதல்: அன்புமணி கோரிக்கை

by Staff / 10-01-2024 04:55:08pm
அதிகரிக்கும் புவி வெப்பமயமாதல்: அன்புமணி கோரிக்கை

அண்மையில் நிறைவடைந்த 2023-ஆம் ஆண்டு தான் பூமியின் வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகியுள்ளது. பூமியின் பல்வேறு பகுதிகளில் புவி வெப்பமயமாதலால் ஏற்பட்ட காட்டுத் தீ, வறட்சி, வெப்ப அலைகள் போன்றவற்றின் காரணமாக கடந்த ஆண்டின் சராசரி வெப்பநிலை தொழில்புரட்சி காலத்திற்கு முந்தைய சராசரி வெப்பநிலையை விட 1. 48 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. 2023-ஆம் ஆண்டில் பாதிக்கும் கூடுதலான நாட்களின் வெப்பநிலை தொழில்புரட்சி காலத்திற்கு முந்தைய சராசரி வெப்பநிலையை விட 1. 50 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், அனைத்து நாட்களின் வெப்பநிலை தொழில்புரட்சி காலத்திற்கு முந்தைய சராசரி வெப்பநிலையை விட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் பதிவாகியுள்ளது. கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை 2023-ஆம் ஆண்டில் பதிவாகியு்ள்ளது. புவி வெப்ப நிலை இந்த அளவுக்கு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.பூவுலகைக் காப்பதற்காக ஐ. நா காலநிலை மாற்ற மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும். நமது பங்காக தமிழ்நாட்டில், அனல் மின் நிலையங்கள் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பெட்ரோகெமிக்கல் திட்டங்களை கைவிட வேண்டும். , ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று பட்டு, பசுமையான, இயைந்த வாழ்க்கை முறைக்கு மாற முன்வர வேண்டும். கட்டமைப்புகளையும் விதிமுறைகளையும் தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

 

Tags :

Share via