மேல்மருவத்தூர் பக்தர்கள் சாலை மறியல்

by Staff / 28-01-2023 12:36:31pm
மேல்மருவத்தூர் பக்தர்கள் சாலை மறியல்

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே ஓசூரில் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்கள் தனியார் பேருந்தில் வந்துள்ளனர். அப்பொழுது ஆத்தூர் சுங்கச்சாவடி பகுதியில் வாகனம் வந்த பொழுது போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஓட்டுநர் ஹாரன் ஒலித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்த காவலரும், மற்ற வாகனங்களின் ஓட்டுனர்களும் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்பொழுது காவலர் பக்தர்களுடன் வந்த பேருந்து ஓட்டுநரை தாக்கி தகாத வார்த்தையால் பேசியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via

More stories