பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு

தற்காலத்தில் வயது வித்தியாசமின்றி மாரடைப்பால் உயிரை இழக்கின்றனர். சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 16 வயது மாணவி விருந்தா திரிபாதி மாரடைப்பால் உயிரிழந்தார். 11ம் வகுப்பு படித்து வந்த விருந்தா, வகுப்பில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கடும் குளிர் காரணமாக விருந்தாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வட மாநிலங்களில் அதிக குளிர் நீடித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக உயிரிழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
Tags :