லடாக்கில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு
லடாக் யூனியன் பிரதேசத்தில் சமீபகாலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8:25 மணியளவில் மீண்டும் பூமி குலுங்கியது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் நிலப்பரப்பிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. திடீரென நிலம் குலுங்கியதால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
Tags :