மாணவனிடம் பாலியல் அத்துமீறல் - ஆசிரியர் கைது

by Staff / 12-02-2025 12:06:10pm
மாணவனிடம் பாலியல் அத்துமீறல் - ஆசிரியர் கைது

சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் சுதாகரை போலீசார் கைது செய்தனர். 
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியர் சுதாகரை கைது செய்து விசாரரித்து வருகின்றனர். மாணவன் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை பாய்ந்துள்ளது. 
மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆசிரியரை கைது செய்தனர். முன்னதாக கிருஷ்ணகிரி, திருச்சியில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து கைதாகியிருந்தனர்.

 

Tags :

Share via