சைக்கியில் சென்ற சிறுவனின் தலையில் ஆட்டோ ஓட்டுனர் தட்ட முயன்ற நிலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வைரல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புளியமுக்கு பகுதியில் சேர்ந்த ஆட்டோ அப்துல்கபூர் (42) இவர் பெரிய கோவில் தெரு பகுதியில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்டிருந்த போது ஆட்டோவிற்கு முன்னால் சைக்கில் ஓட்டிச் சென்ற சிறுவன் ஒருவன் பின்னால் வந்த ஆட்டோ ஓட்டுனர் ஓரமாக போகச் சொல்லி ஹாரன் அடித்துள்ளார். இதனை கவனிக்காத அந்த சிறுவன் சைக்கிலை ஓட்டியவாரு முன்னால் சென்றுள்ளர்.
அப்போது அருகில் சென்ற ஆட்டோ ஓட்டுனர் அப்துல்கபூர் அந்த சிறுவனின் தலையில் தட்டி அறிவுறுத்த முயன்றுள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோவின் முன் சக்கரம் அருகில் இருந்த வீட்டின் முன்பு இருந்த படிக்கட்டில் ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்ந்தனர். மேலும் ஆட்டோவில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags : சைக்கியில் சென்ற சிறுவனின் தலையில் ஆட்டோ ஓட்டுனர் தட்ட முயன்ற நிலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வைரல்